இதை ட்ரை பண்ணுங்க.. வெஜ் கீமா மசாலா ரெசிபி

வீட்டிலேயே சுவையான வெஜ் கீமா மசாலா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 2

குடைமிளகாய் - 1

தக்காளி - 2

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

பச்சை பட்டாணி - கால் கப்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூஜ்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

மல்லித்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

பீன்ஸ் - கால் கப்

கேரட் - கால் கப்

பன்னீர் - கால் கப்

சீஸ்

நெய்

எலுமிச்சை சாறு

கொத்தமல்லித்தழை

உப்பு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். கூடவே, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பிறகு, பொடியாக நறுக்கிய குடைமிளகாய், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், அரைத்த தக்காளி விழுது சேர்த்து கிளறி வேகவிடவும்.

அத்துடன், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வேக வைக்கவும். பின்னர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு, தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

தற்போது, பொடியாக நறுக்கி வேக வைத்த கேரட், பீன்ஸ் சேர்த்து கிளறவும்.கூடவே, துருவிய பன்னீர், துருவிய சீஸ், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும். இறுதியாக, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான வெஜ் கீமா மசாலா ரெடி..!

More News >>