ஹாப்பி பர்த்டே தளபதி விஜய்! மெர்சலான தெறி டைட்டில் பிகில்!
தளபதி விஜய்யின் 45வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் இந்தியளவில் ட்விட்டரில் டிரெண்டிங் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக்கும் நள்ளிரவு 12மணிக்கு செகண்ட் லுக்கும் வெளியானது.
தளபதி 63 என்று இதுவரை டிரெண்டாகி வந்த ஹேஷ்டேக் இனி பிகில் ஹேஷ்டேகில் டிரெண்டாகி வருகிறது.
கால்பந்தாட்ட வீரர் மற்றும் தாதா மீனவராக விஜய் இரண்டு லுக்கில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.
தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு இயக்குநர் அட்லி அடுத்த பிளாக்பஸ்டரை இந்த தீபாவளிக்கு கொடுக்க தயாராகி விட்டார் என்பது இப்போதே தெரிகிறது.
தந்தை மகன் என இருவேடங்களில் விஜய் நடிக்கிறாரா? அல்லது ஸ்போர்ட்ஸ்மேன் விஜய் ஃபிளாஷ்பேக்கில் வருவாரா? என்பது போன்ற குழப்பங்களும் ஃபர்ஸ்ட் லுக் மூலம் நமக்கு தெரிகிறது.
ஆனால், தந்தை விஜய்யின் பெயர் மைக்கேல் என்றும் மகன் விஜய் பெயர் பிகில் என்றும் சில நாட்களுக்கு முன்னதாகவே செய்திகள் கசிந்திருந்தன. டைட்டிலும் பிகில் என வைக்கப்பட்டிருப்பதால், இரட்டை வேடத்திலேயே விஜய் மிரட்ட உள்ளார் என்பது தெரிகிறது.
எப்படி இருந்தாலும், விஜய் ரசிகர்களுக்கான மிகப்பெரிய பிறந்த நாள் பரிசை பிகில் படக்குழு தவறாமல் தந்துள்ளது.
செல்ஃப் டிரைவ் போகிறீர்களா? இவற்றை கவனியுங்கள்