சட்டசபையில் ஜெயலலிதாவின் படமா? துரைமுருகன் காட்டம்

தமிழக சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படம் தேவையில்லாத ஒன்று என சட்டசபை எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் கூடிய விரைவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு விழா வைத்துத் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தி.மு.க முதன்மைச் செயலாளரும் சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான துரைமுருகன் கூறுகையில், "சட்டசபையில் மறைந்த ஜெயலலிதாவின் உருவப்படம் தேவையில்லாத ஒன்று. இந்தத் திறப்பு விழாவில் கவனம் செலுத்துவதைவிடுத்து பட்ஜெட் தாக்கல் மீது அரசு கவனம் செலுத்தலாம். ஜெயலலிதா என்பவர் ஒரு குற்றவாளி. அவரது  உருவப்படம் திறப்பு குறித்து சட்டசபை உறுப்பினர்களுக்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை" எனக் கூறினார்.

மேலும் இந்த விழா அவசரகதியில் நடைபெறுவதாகவும் ஜெயலலிதாவின் மரணம் குறித்தே இன்னும் முழுமையாகப் பேசித்தீரவில்லை என்றும் துரைமுருகன் குற்றம் சுமத்தினார்.

More News >>