கட்டாந்தரையில் படுத்து தூங்கிய முதலமைச்சர்

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இரவில் அவர் கிராமத்து பள்ளிக்கூடத்தில் தரையில் படுத்து தூங்கினார்.

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம்- காங்்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் குமாரசாமி அவ்வப்போது காங்கிரஸ் கட்சியினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால், நித்ய கண்டம், பூரண ஆயுசாக ஆட்சி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அவர் ‘கிராம வஸ்தவயா 2.0’ என்ற பெயரில் கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களிடம் குறை கேட்டு வருகிறார். நேற்று(ஜுன்21) யாத்கிர் மாவட்டம், குர்மித்கல் கிராமத்திற்கு வந்தார். அவர் வருவதற்கு முன்பு அங்குள்ள ஒரு லாட்ஜில் குளியலறை புதுப்பித்து கட்டப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சருக்காக கிராமங்களில் ஐந்து நட்சத்திர ஓட்டல் போல் வசதிகள் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதைத் தொடர்ந்து, குர்மித்கல் கிராமத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘முதலமைச்சரான எனக்கு அடிப்படை வசதிகள் கூட செய்யக் கூடாதா? ஒரு குளியலறை கட்டியது குற்றமா? நான் திரும்பிப் போகும் போது இந்த குளியலறையை எடுத்து ெகாண்டா போகப் ேபாகிறேன்?

எனக்கு கட்டில், மெத்தை, ஏ.சி. எல்லாம் தேவையில்லை. ரோட்டில் கூட படுத்து தூங்குவேன். இங்கு வரும் போது சாதாரண பஸ்ஸில்தான் வந்தேன். வால்வோ பஸ்ஸில் வரவில்லை. நான் கிராமங்களுக்கு வந்து மக்களை சந்தித்தால், நான் ‘கிம்மிக்ஸ்’ பண்ணுவதாக பா.ஜ.க. கிண்டலடிக்கிறது. எனக்கு அவர்கள் எதுவும் கற்றுத் தர வேண்டியதில்லை’’ என்று கூறினார்.

இதன்பின்பு, கிராமத்து பள்ளி மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் அவர் கலந்துரையாடினார்.

மக்களிடமும் குறைகளை கேட்டார். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்திருப்பதை கூறினார்.

இதையடுத்து, அவரும், அமைச்சர்களும் இரவில் பள்ளிக்கூடத்தில் தரையில் படுத்து தூங்கினர். முதலமைச்சர் தரையில் படுத்திருப்பதை படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

தெலுங்கானா : தர்ஹாவிற்கு சென்று திரும்பிய 4 பேர் விபத்தில் சிக்கி பலி
More News >>