அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..! 3 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்
சென்னை பல்லாவரம் 8 -வது வார்டு அதிமுக வட்ட செயலாளராக இருப்பவர் விஜயகுமார். தனது வார்டுக்குட்பட்ட சுந்தரேசன் தெருவில் விஜயகுமார் நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளது. வெட்டுகாயங்களுடன் உயிருக்கு போராடிய விஜயகுமாரை மீட்டு பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பரங்கிமலை துணை ஆணையர் முத்துச்சாமி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். முன்பகை காரணமாக இந்த கொலை முயற்சி நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பல்லாவரம் போலீஸ் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சியைப் போல் கள்ளக்குறிச்சியில் பயங்கரம்; ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்