உலகக் கோப்பை கிரிக்கெட் ஆப்கனுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டனில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் வெற்றி நடைபோடும் இந்தியாவை, தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்து அதல பாதாளத்தில் உள்ள ஆப்கன் அணி சமாளிக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, இதுவரை 4 போட்டிகளை எதிர்கொண்டு 3 போட்டிகளில் வெற்றியும், நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்தான நிலையில் 7 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி யோ 5 போட்டிகளிலும் தோற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் பரிதாபமாக உள்ளது. மேலும் அந்த அணி வீரர்களின் நடவடிக்கைகளாலும் பெரும் குழப்பத்தில் உள்ளது. இதனால் இன்று சவுத் தாம்டனில் நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தானை பந்தாடி இந்திய அணி பல சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் ஆடி வருகிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மாவுடன், லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளார்.லேசான காயம் குணமாகி விட்டதால் தமிழக வீரர் விஜய் சங்கரும் அணியில் இடம் பெற்றுள்ளார். தசைப்பிடிப்பு காரணமாக புவனேஸ்வர் குமார் இன்றைய போட்டியில் பங்கேற்காத நிலையில் முகமது சமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு மிகப் பிரகாசம் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

உலகக் கோப்பை கிரிக்கெட் ; கருணை காட்டிய மழை.. பாக்.குக்கு எதிராக இந்தியா பேட்டிங்
More News >>