இனி மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டுபோக முடியாது!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்போன்களை கொண்டு செல்ல உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.

கடந்த 2ஆம் தேதியன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர நுழைவு வாசலில் உள்ள கடைகளில் இரவு நேரம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோவிலினை சுற்றியுள்ள கடைகளினால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்று மக்கள் கூறியதை அடுத்து, கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்து பல்வேறு கட்டுபாடுகளை விதித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அதன் முழு விவரம் கீழே:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் எடுத்துச்செல்ல தடை. செல்போன்களை கொடுத்துச்செல்ல தனி கவுண்டர்கள் உருவாக்கம்.

கோயிலுக்குள் உயர் தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அதோடு, கோயிலுக்குள் தீ தடுப்பு கருவிகள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

கோவிலில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் இருக்கும் கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்குமாறு தமிழக அரசு கோர வேண்டும்.

More News >>