நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் ஐசரி கணேஷ் மீது அவமதிப்பு வழக்கு

நடிகர் சங்க வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று நீதிபதிக்கு ‘பிரஷர்’ கொடுத்த ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அFYIவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ம் தேதியன்று எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களத்தில் இறங்கின. ஆனால், அடுத்தடுத்த திருப்பங்களால் தேர்தலே நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. கடைசியாக, திட்டமிட்டப்படி தேர்தலை நடத்தவும், போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஜூன் 22ம் தேதி மாலையில்தான் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (23ம் தேதி) மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கிடையே, தேர்தலை நடத்துவதற்கும், பாதுகாப்பு அளிப்பதற்கும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், ‘‘நடிகர் சங்க வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று சிலர் மூலமாக ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் என்னை அணுக முயற்சித்தார்கள். இது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். எனவே, அவர்கள் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்து கொள்கிறது’’ என்று தெரிவித்தார்.

 

இதையடுத்து, இந்த வழக்கில் ஐசரிகணேஷ், அனந்தராமன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

More News >>