சுவையான கொள்ளு வடை ரெசிபி

வீட்டிலேயே மிக எளிமையா செய்யக்கூடிய கொள்ளு வடை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கொள்ளு - ஒரு தம்ளர்

அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல் - கால் தம்ளர்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - ஒரு துண்டு

சீரகம் - அரை டீஸ்பூன்

சோம்பு - ஒரு சிட்டிகை

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய்

கறிவேப்பிலை

கொத்தமல்லித்தழை

உப்பு

செய்முறை:

முதலில், கொள்ளுவை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து பிறகு, மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து ஒரு கிண்ணத்தில் போடவும்.

அத்துடன், அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காய்த்தூள், சீரகம், சோம்பு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து வடை பதத்திற்கு நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தட்டி அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான கொள்ளு வடை ரெடி..!

சுவையான வேர்கடலை சாதம் ரெசிபி
More News >>