ஓ.என்.ஜி.சி பைப்லைனில் கேஸ் கசிவு..! கிராம மக்கள் ஆவேசம்

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜுலுவில் ஓஎன்ஜிசி கேஸ் நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனத்திற்காக சக்கினெட்டி பள்ளி மண்டலம், பல்லம் கொண்ட வீதியில் சென்று கொண்டிருந்த ஓ.என்.ஜி.சி. பைப் லைனில் திடீரென இன்று அதிகாலை முதல் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓஎன்ஜிசி அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு வந்து கேஸ் கசிவு அடைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஓஎன்ஜிசி அமைத்துள்ள பைப்லைன் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் அடிக்கடி இதுபோன்ற கேஸ் கசிவு ஏற்படுவதாகவும் இதனால் எந்த நேரத்தில் எங்கு கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று கேஸ் கசிவு ஏற்பட்ட விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை இன்னும் அந்த துயரத்திலிருந்து மீளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அடிக்கடி இதுபோன்ற கேஸ் கசிவு ஏற்படுவது பொதுமக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

- தமிழ்

ராமதாஸின் அநாகரீகப் பேச்சு; பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
More News >>