மொறு மொறு முட்டை போண்டா ரெசிபி
அசத்தலான சுவையில் முட்டை போண்டா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
முட்டை - 6
கடலை மாவு - அரை கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் முட்டைகளை வேக வைக்கவும்.
பிறகு, ஒரு தட்டில் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
வேக வைத்த முட்டைகளை நான்கு பக்கமாக கீறி, இதில் பிரட்டி வைக்கவும்.ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலக்கவும்.
தற்போது, தயாராகவுள்ள முட்டைகளை எடுத்து இந்த கலவையில் முக்கி எடுக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டைகளை ஒவ்வொன்றாகவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான முருங்கைக்காய் கார குழம்பு ரெசிபிஅவ்ளோதாங்க.. சுவையான முட்டை போண்டா ரெசிபி ரெடி..!