சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை1ல் சட்டசபையில் விவாதம்

சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது தி.மு.க. கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், ஜூலை 1ம் தேதி விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பின்பு, நாடாளுமன்றத் தேர்தலுக்காக பேரவை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பேரவையில் தமிழக அரசு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி நிறைவேற்ற வேண்டியுள்ளது. இதற்காக வரும் 28ம் தேதியன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது.

இந்நிலையில், இந்த தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது, எந்தெந்த நாளில் எந்தெந்த துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்துவது என்பது குறித்து முடிவெடு்ப்பதற்காக பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் தனபால் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, விஜயதாரணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

அதில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த துறை மானியக் கோரிக்கைகளை எந்த நாளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது, கட்சிகளின் உறுப்பினர்கள் பேசும் நேரம், கவன ஈர்ப்பு, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன்பின், செய்தியாளர்களிடம் சபாநாயகர் தனபால் கூறியதாவது:

மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்; அனைத்து நாட்களும் கேள்வி, பதில் எடுத்து கொள்ளப்படும்.

மறைந்த உறுப்பினர்களுக்கு முதல் நாளன்று இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றம் 29, 30 அரசு விடுமுறை. ஜூலை 1-ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் எடுத்து கொள்ளப்படும். மேலும், சபாநாயகர் மீது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும். ஜூலை 30ம் தேதி வரை சட்டப்பேரவை கூடும். 

இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.

டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அதிமுக கூட்டத்தில் அழைப்பில்லை
More News >>