கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் மழை..! வெள்ளக்காடான சாலைகள்
கர்நாடகாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வட கர்நாடக பகுதிகளான பெல்லாரி,பெல்காம் கொப்பல், உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறன. மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சில பகுதிகளில் வாகனங்கள் ஆற்றை கடக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல் சில பகுதிகளில் பாலத்திற்கு மேல் வெள்ளநீர் செல்வதால் பாலத்தைக் கடக்க முயன்ற சில வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. மழை பெய்யும் போது பலத்த சூறைக்காற்றும் வீசுவதால் விவசாய நிலங்களில் பயிர்கள், மரங்களும் சேதமடைந்துள்ளன. கர்நாடகாவின் வட மாவட்டங்களில் ஒரு நாள் பெய்த மழைக்கே குடியிருப்புகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
இந்நிலையில் மேலும் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நிவாரணப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு உள்ளது.
- தமிழ்