மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி தருக..! மத்திய அரசின் கதவை தட்டும் குமாரசாமி

தமிழக எல்லையில் இருந்து 3.90 கிலோ மீட்டர் தூரத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு இன்று கர்நாடக அரசின் பொதுப்ணித்துறை தலைமைப் பொறியாளர் விண்ணப்பித்துள்ளார்.

 

கர்நாடக மாநிலத்தில் தொடர் வறட்சி நிலவுகிறது என்பதாலும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் இந்த அணை கட்ட திட்டமிட்டிருப்பதாக விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் செலவில், 5252 ஹெக்டர் பரப்பளவில் நீர் தேக்கும் அளவுக்கு இந்த அணை கட்ட திட்டமிடிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

-தமிழ் 

More News >>