3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது..! இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் யாரும் பணியாற்றக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2016 ஜூன் 30-ல் இருந்து மூன்று ஆண்டுகளைக் கடந்து பணியாற்றுபவர்களை கட்டாய பணியிட மாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 3-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் விருப்பக் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், புகார்கள் மற்றும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காகவே கட்டாய பணியிட மாற்றம் வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையின் பணியாளருக்கான இணை இயக்குநர் நாகராஜமுருகன் அனுப்பி உள்ளார்.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடும் வகையில், ரயில் முன்பதிவு தொடங்கியது