முலாயம்சிங் உடல்நலம் பாதிப்பு டெல்லி மருத்துவமனையில் அனுமதி
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ் சிறுநீரகப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம்சிங் யாதவ் சமீப காலமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகிறார்.
இம்மாத துவக்கத்தில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், லக்னோவில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, மெதந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டெல்லியை அடுத்துள்ள காசியாபாத்தில் இருக்கும் யசோதா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மக்களவை சபாநாயகர் யார்? பா.ஜ.க.வில் பரபரப்பு விவாதம்