இரத்தக் குழாய்களை காத்திடும் பழங்கள்

குஜராத்திலுள்ள மத்திய பல்கலைக்கழகம் செய்த ஆய்வு ஒன்றில் உடல்பருமன் மற்றும் நீரிழிவு பாதிப்பு உள்ளோருக்கு இரத்த நாளங்களில் அடைப்பு உருவாக வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் நீரிழிவு என்னும் சர்க்கரைநோயால் (வகை 2) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2030ம் ஆண்டு ஏறத்தாழ 8 கோடியாக உயரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. சர்க்கரை நோயோடு கூட உடல் பருமனாலும் இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இரண்டு குறைபாடுகளும் இதய சம்மந்தமான நோய்களுக்கு காரணமாகின்றன.

இரத்த நாளங்கள்

இரத்த நாளங்களின் உள்சுவர் எண்டோதீலிய செல்களால் ஆனது. உயர் அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இரத்தம் பாயும்போது உருவாகும் அழுத்தத்தினால் ஏனைய செல்கள் பாதிக்கப்படாத வண்ணம் எண்டோதீலிய செல்கள் பாதுகாக்கின்றன.

இஆர்கே5 என்னும் புரதவகையானது நைட்ரிக் ஆக்ஸைடின் அளவை ஒழுங்குபடுத்துகிறது. இந்த நைட்ரிக் ஆக்ஸைடு இரத்த நாளங்கள் சுருங்குவதற்கும் விரிவதற்கும் உதவி செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாகும்போது இஆர்கே 5 புரதம் வேலை செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.

குறையடர்த்தி லிப்போபுரதமாகிய (LDL) கெட்ட கொழுப்பும் எண்டோதீலிய செல்களை பாதிக்கிறது. உயரும் சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்பு ஆகியவை இஆர்கே5 புரதத்தின் அளவு குறைய காரணமாகின்றன. தொடர்ந்து நைட்ரிக் ஆக்ஸைடின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக செல்களில் அழற்சி ஏற்படுகிறது. அவற்றின் செயல்பாடு குறைகிறது.

எண்டோதீலிய செல்களின் செயல்பாடு குறையும்போது இரத்த நாளங்களில் காரைகள் உருவாகின்றன. இந்தக் காரைகளே இதயத்தில் அடைப்பு ஏற்படச் செய்து மாரடைப்புக்கு காரணமாகிறது. நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளோரின் எண்டோதீலிய செல்களின் மேல் இஆர்கே 5 புரதம் எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து இன்னும் திட்டமாய் அறியப்படவில்லை.

பழங்கள்

ஃபைஸ்டின் (fisetin) என்னும் தாவர மூலக்கூறானது இஆர்கே 5 என்னும் புரதவகையின் அளவை ஒழுங்குபடுத்துவதோடு, இழந்த அளவையும் மீட்டுத் தரும் இயல்பும் கொண்டது. இது ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, வெங்காயம் மற்றும் வெள்ளரி போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது.

நெய்: தவிர்க்கவேண்டிய உணவு பொருளா?
More News >>