கேலக்ஸி டேப்லெட்: டெக்ஸ் இயங்குதளத்துடன் அறிமுகம்

கையடக்க கணினி சந்தையின் தேக்கநிலையை மாற்றும்படியாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்5இ மற்றும் கேலக்ஸி டேப் ஏ 10.1 என்ற இரு கையடக்க கணினிகளை அறிமுகம் செய்துள்ளது.

கையடக்க கணினியை மேசை கணினி போன்று பயன்படுத்த உதவும் டெக்ஸ் (DeX) என்ற சாம்சங் நிறுவனத்தின் இயங்குதளம் எஸ்5இ சாதனத்தில் உள்ளது. டெக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களை மாற்றி மாற்றி பயன்படுத்தும் வசதியை இது கொண்டிருக்கும். பிரத்யேகமான போகோ (POGO) விசைப்பலகையை (Keyboard) பயன்படுத்தலாம். இது தனியே கிடைக்கும்.

கேம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்காக AMOLED திரை கொண்டது. 5.5 மிமீ பருமனுடன் 400 கிராம் எடை மட்டுமே கொண்ட எஸ்5இ சாதனத்தில் 14.5 மணி நேரம் இயங்கக்கூடிய மின்னாற்றல் கொண்ட மின்கலம் (பேட்டரி) உண்டு.

வைஃபை வசதி மட்டும் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்5இ ரூ.35,999 விலையில் கிடைக்கும். சாம்சங் இ-ஷாப் மற்றும் சாம்சங் ஓபரா ஹவுஸ் ஆகியவற்றிலும் அமேசான்.இன் தளத்திலும் இதை வாங்கலாம். வைஃபை மற்றும் எல்டிஇ வசதி கொண்ட டேப் ரூ.39,999 விலையில் கிடைக்கும். இது ஃபிளிப்கார்ட் தளத்திலும் கிடைக்கும்.

வைஃபை வசதி மட்டும் கொண்ட சாம்சங் டேப் ஏ 10.1 ரூ.14,999 விலையில் அமேசான்.இன் மற்றும் சாம்சங் இ-ஷாப்களில் ஜூன் 26ம் தேதி முதல் விற்பனையாகும். வைஃபை மற்றும் எல்டிஇ வசதியுடன் கூடிய கேலக்ஸி டேப் 10.1 ரூ.19,999 விலையில் ஜூலை 1ம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.

More News >>