புதுச்சேரி ஷாப்பிங் மாலில் டூ-வீலர்களை மட்டும் குறிவைத்து திருடி வந்த 2 பேர் கைது..!
புதுச்சேரி-கடலூர் சாலையில் பிரபல ஷாப்பிங் மால் உள்ளது. இதன் நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தபடும், மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடு போய் வந்தது. இந்த நிலையில் நேற்றிரவு உருளையன்பேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகபடும்படியாக சுற்றி கொண்டு இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள முத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் அவரது உறவினர் சதீஷ்குமார் என்பதும், புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள்களை திருட வந்து இருப்பதும் தெரிய வந்தது.இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போது புதுச்சேரி பகுதியில் டூவீலர் திருட்டு போவதும் விழுப்புரம் பகுதியில் விற்று இருப்பது தெரிய வந்தது. பின்பு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருடிய 11 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ 4 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமார், சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
ஸ்மார்ட்போனும் ஐஎம்இஐ எண்ணும்: வருகிறது புதிய பதிவேடு