கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு..! உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி என்ற கிராமத்தில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி விற்கவ்வடுவதாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிஜாரிகள், இறைச்சி திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது இறந்த ஆட்டின் இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து,15 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்,அதனை மண்ணில் புதைத்து அளித்தனர். மேலும், கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்த கடைக்காரருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
சேகர் ரெட்டியிடம் சிக்கிய 34 கோடி மணல் விற்று சம்பாதித்ததாம்... வருமானவரித் துறை தகவல்