உலகக் கோப்பை கிரிக்கெட் மே.இந்திய தீவுகளை பந்தாடுமா இந்தியா?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்விகளால் துவண்டு போயுள்ள மே.இந்திய தீவுகள் அணியை, வெற்றி மேல் வெற்றி என இத்தொடரில் இதுவரை தோல்வியே காணாத இந்தியா இன்று எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவின் வெற்றி தொடரும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது.நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் 9 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வி அடையாத ஒரே அணி என்ற பெருமையுடன் உள்ளது இந்தியா. எஞ்சியுள்ள இன்னும் 4 போட்டிகளில் இந்தியா ஆட வேண்டியுள்ளது. மே.இந்திய தீவுகள், இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய 4 அணிகளுடன் இந்தியா மோத உள்ளது. இந்த 4 போட்டிகளில் இரண்டில் வென்றால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும் என்ற நிலை உள்ளது. நான் கிலும் வெற்றி பெற்றால் இந்தியா தான் பட்டியலில் டாப் இடத்துக்கு சென்று விடும்.

இந்நிலையில் இன்று மான்செஸ்டரில் நடைபெறும் போட்டியில் மே.இந்திய தீவுகள் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் ஜாம்பவானாகத் திகழ்ந்த மே.இந்திய தீவுகள் அணி, இந்தத் தொடரில் தோல்வி மேல் தோல்வி கண்டு துவண்டு போய் உள்ளது. ஆடிய 6 போட்டிகளில் நான்கில் தோற்று 3 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டு, அரையிறுதி வாய்ப்பையும் இழந்த சோகத்தில் மே.இந்திய தீவுகள் உள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் எழுச்சி பெறுமா என்பதும் சந்தேகம் தான்.மே.இந்தியதீவுகளின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை கட்டுப்படுத்தினாலே இந்தியாவுக்கு வெற்றி வசப்பட்டு விடும். மற்றபடி ஷாய் ஹோப், கேப்டன் ஹோல்டர், பிராத் வைட் ஆகியோர் அதிரடி காட்டலாம் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய அணி வீரர்களின் பேட்டிங்கும், பவுலிங்கும் மெருகேறி வருகிறது. கேப்டன் கோஹ்லி அபாரமாக திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ரோகித் சர்மாவும் நல்ல பார்மில் உள்ளார். ஆனால் தோனியின் நிலைமை தான் மோசமாகி விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளார். இந்தத் தொடரில் இதுவரை மொத்தமே 90 ரன்கள் தான் எடுத்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினே குறை கூறும் அளவுக்கு தோனியின் மந்தமான ஆட்டம் உள்ளது. இதனால் விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் தோனி, இன்று அதிரடி காட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இன்றைய போட்டியில் வெல்லும் பட்சத்தில் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பும் மிகப் பிரகாசமாகி விடும்.

நியூசி.யின் தொடர் வெற்றிக்கு குழிபறித்த பாகிஸ்தான்; 1992 வரலாறு மீண்டும் திரும்புமா?
More News >>