காரை உரசியவரை இரும்பு கம்பியால் அடித்த பெண் டிரைவர் கைது
தனது காரை உரசிய இன்னொரு காரின் டிரைவரை இரும்பு கம்பியால் அடித்த இளம்பெண் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மொகாலியைச் சேர்ந்த இளம்பெண் சீட்டல் சர்மா, சண்டிகரில் டாக்ஸி ஓட்டுகிறார். இவர் கடந்த 25ம் தேதியன்று ஒரு சாலையில் தனது காரை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது பின்புறம் பார்த்தவாறே வேகமாக காரை ஓட்டியுள்ளார். பின்னால் நிதிஷ் என்பவர் கார் ஓட்டி வந்துள்ளார். அவர், சீட்டல் சர்மா காருக்கு வழி விட்டு ஒதுங்கவில்லை எனத் தெரிகிறது. அதனால், ஆத்திரமடைந்த சீட்டல் காரை நடுரோட்டில் நிறுத்்தினார்.
பின்னர் தனது காரில் இருந்த ஒரு இரும்புத் தடியை எடுத்து கொண்டு வந்து, நிதிஷை சரமாரியாக அடிக்கத் தொடங்கினார். அவரிடம் அடிவாங்காமல் கைகளால் தடுத்துக் கொண்டே நிதிஷ் வாக்குவாதம் செய்தார். அப்போது அந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர், அந்த காட்சிைய வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினார்.
இந்த வீடியோ வைரலாக பரவியதும், காவல்துறையினர் தலையிட்டனர். அவர்கள் சீட்டல் சர்மாவை தேடிப்பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பெண்ணை துன்புறுத்திய டிரைவர்:
மும்பையில் இதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஆண் டிரைவர் தனது டாக்ஸியில் பயணித்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டிருக்கிறார். கடந்த 22ம் தேதியன்று, மும்பை போரிவிலி கிழக்கு பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ஓலா டாக்ஸியில் பயணம் செய்தார். அந்த காரை 25 வயதுடைய சந்தீப் புவனேஸ்வர் வர்னவால் ஓட்டியிருக்கிறார். காரை ஓட்டிக் கொண்டிருந்த சந்தீப், சைடில் உட்கார்ந்திருந்த பெண்ணையும் ரசித்தபடி சென்றிருக்கிறார்.
இதனால், அந்த பெண் எரிச்சலடைந்திருக்கிறார். ஆனாலும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி கார் நின்றிருந்த போது அந்த பெண்ணை வைத்த கண் வாங்காமல் பார்த்து ெகாண்டேயிருந்த சந்தீப் திடீரென தனது பேண்ட் ஜிப்பை கழற்றி, ஆபாசமாக ஏதோ செய்யத் தொடங்கினார். இதைக் கண்டு கோபம் கொண்ட அந்த பெண், காரை விட்டு இறங்கி ஓடினார். பின்னர், ஓலா கம்பெனி போன் போட்டு திட்டினார். அந்த கம்பெனி உடனடியாக வேறொரு டாக்ஸியை அவருக்கு அனுப்பியது. அத்துடன் சந்தீப்பை வேலை நீக்கம் செய்தது.
இதன்பின், அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் சில்டாய்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலேக்கர் வழக்கு பதிவு செய்து, சந்தீப்பை கண்டுபிடித்து கைது செய்தார். முதலில் நடந்த சம்பவத்தை மறுத்த சந்தீப் பின்னர், தனக்கு உணர்ச்சி அதிகமாகி விட்டதால் அப்படி செய்ததாக ஒப்புக் கொண்டார்.
அவங்க 37 பேர்... நான் ஒத்தை ஆள்...! மக்களவையில் கெத்து காட்டிய ரவீந்திரநாத் குமார்