ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் சாப்பிடுபவரா நீங்கள்? - உங்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருக்கிறது
பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து இந்தியாவில் விற்கப்படும் 64% ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் அங்கீகாரம் பெறாதவை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
12 பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட 500 மருந்து உற்பத்தியாளர்கள் சுமார் 3,300 பிராண்ட்களின் பெயர்களின் இந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளை விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், லண்டன் குயின்மேரி பல்கலைக்கழகம் மற்றும் நியூகாஸ்டல் பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதில், 2007 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 118 வகையான ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளில் 64 சதவீதம் மத்திய மருந்துகள் அங்கீகாரம் பெறாதவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியென்றால் நீங்கள் அங்கீகாரம் பெறாத மருந்துகளை தான் உட்கொள்கிறீர்களா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
உலகளவில் இந்தியாவில் தான் அதிகமானோர் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொள்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக சீனா மற்றும் அமெரிக்கா உள்ளது.
இந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளுக்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அங்கீகாரம் அளிக்கவில்லை. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் 4 சதவீத ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கோழிகளுக்கும் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. கோழிகளை நோய்களின் இருந்து காப்பதற்கான கடைசி நம்பிக்கையாக கொலிஸ்டின் என்ற ஆன்ட்டிபயோடிக் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐநா.வின் ஆன்ட்டி மைக்ரோபியல் எதிர்ப்பு ஆலோசகர் பேராசிரியர் டிமோதி வால்ஷ் கூறுகையில், “மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்குதான் இந்த மருந்து கொடுக்கப்படும். ஆனால் இந்தியாவில் இது கோழிகளுக்கு கொடுக்கப்படுகிறது என்பது மிகவும் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது” என கூறியுள்ளார்.