மிஸ் ஆஸ்திரேலியா பட்டத்தை வென்ற இந்திய இளம்பெண்
ஆஸ்திரேலியாவில் நடந்த அழகிப் போட்டியில் ‘மிஸ் யுனிவர்ஸ் ஆஸ்திரேலியா-2019’ பட்டத்தை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 26வயது இளம்பெண் பிரியா செர்ராவோ வென்றுள்ளார்.
அந்நாட்டு தலைநகர் மெல்போர்னில் உள்ள சோபிடெல் ஓட்டலில் ஜூன் 27ம் தேதி நடந்த அழகிப் போட்டியில் பிரயா செர்ராவோ, மிஸ் யுனிவர்ஸ் ஆஸ்திரேலியா-2019 பட்டத்தை வென்றார். இவரது பெற்றோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஓமன் மற்றும் துபாயில் வசித்து விட்டு, கடைசியாக ஆஸ்திரேலியாவில் வந்து செட்டிலாகியுள்ளனர். தனது 11 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த பிரியா, சட்டம் படித்து தற்போது அரசியல் ஆலோசகராக உள்ளார்.
மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்ற அவர் கூறுகையில், ‘‘நான் இதற்கு முன்பு மாடலிங் செய்ததில்லை. முதல் முறையாக இந்த போட்டியில் பங்கேற்றதில் இந்த பட்டத்தை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.