வைட்டமின் டி ஏன் குறையக்கூடாது?

எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், உடல் போதுமான சுண்ணாம்பு (கால்சியம்) சத்தை உறிஞ்சிக் கொள்ளவும் வைட்டமின் டி அவசியம். உடலில் இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்துவதால் நீரிழிவு நோய் வராமல் வைட்டமின் டி தடுக்கிறது.

பச்சிளங்குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் எக்ஸிமா என்ற தோல்வியாதி வராமல் வைட்டமின் டி பாதுகாக்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு உயர்இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நல கேடுகளுக்குக் காரணமாகும் பிரீக்கிளம்ஸியா, கர்ப்ப கால நீரிழிவு மற்றும் பிறப்புறுப்பில் பாக்டீரியா தொற்றின் காரணமாக ஏற்படும் அழற்சி ஆகியவை ஏற்படாமல் வைட்டமின் டி தடுக்கிறது. கர்ப்பிணி பெண்கள் வைட்டமின் டி குறைவு ஏற்படாமல் தங்களை காத்துக்கொண்டால் பிறக்கும் குழந்தைக்கு இரண்டு வயது வரைக்கும் உணவு ஒவ்வாமை ஏற்படாது.

நோய் தடுப்பாற்றலை வைட்டமின் டி அதிகரிக்கிறது. புற்றுநோயை தடுப்பதோடு, புற்றுநோயின் தீவிரத்தை தடுப்பதில் வைட்டமின் டியின் செயல்பாடு குறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுள்ளன. அல்ஸைமர் என்னும் ஞாபகசக்தி குழப்பம், உயர்இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் ஆட்டிசம் ஆகியவற்றை வைட்டமின் டி தடுப்பது குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்நோய்களை தடுக்கும் இயல்பு வைட்டமின் டி சத்துக்கு உள்ளது என்றே தெரிய வந்துள்ளது.

வைட்டமின் டி சத்தின் மூலம்:

வைட்டமின் டி, சூரிய ஒளியில் உள்ளது. தற்போது நகர்ப்புறங்களில் யாரும் அதிகமாக வெளியில் நடமாடுவது இல்லை. அறைகளுக்குள்ளே தான் வாழ்க்கை நடக்கிறது. தினமும் சிறிது நேரம் சூரிய ஒளி படும்படி இருந்தாலும் போதிய அளவு வைட்டமின் டி நமக்குக் கிடைக்காதவண்ணம் காற்று மாசு மற்றும் மூடுபனி ஆகியவை தடுத்துவிடுகின்றன. நம் உடலில் வைட்டமின் டி உருவாகுமளவுக்கு புறஊதா கதிர்கள் கிடைப்பதில்லை. ஆகவே, வைட்டமின் டி குறைவு, இந்த நவீன கால வியாதியாகும்.

நமக்கு எப்போதும் காற்று எப்படி அவசியமோ அதேபோன்று வைட்டமின் டியும் அவசியமாகும். இரத்தத்தில் போதுமான அளவென்று குறிக்கப்படுவதைக் காட்டிலும் 50 முதல் 60 விழுக்காடு சத்து அவசியம். செயற்கை முறையில் சேர்க்கப்படும் சத்து உகந்ததல்ல. தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் படும்படி நிற்க வேண்டும். மெக்னீசியம் சத்து அடங்கிய முழு கோதுமை, பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்ற கொட்டை வகை உணவு பொருள்கள், யோகர்ட் ஆகியவற்றை அதிகம் உண்ணவேண்டும்.

மீன், ஈரல், மாட்டிறைச்சி, முட்டை கரு ஆகியவையும் சாப்பிடலாம். உடல் உயரத்திற்கேற்ற எடை மட்டுமே இருக்கும்படி உடல் நிறைக்கும் உயரத்திற்குமான விகிதத்தை காத்துக்கொள்ளவேண்டும். அதிக விகித குறியீடு (BMI) வைட்டமின் டி குறைவுக்கு வழிவகுக்கும்.

More News >>