இலங்கையை அடித்து விரட்டிய தெ.ஆ... அரையிறுதி வாய்ப்பையும் அம்பேலாக்கியது
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி பெற்றது. அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட தெ.ஆப்ரிக்கா, இந்த வெற்றியின் மூலம் தற்போது இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பையும் அம்பேல் செய்து விட்டது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அரையிறுதிக்கு முதல் அணியாக ஆஸ்திரேலியா அடி எடுத்து வைத்து விட்டது.இந்தியாவும், நியூசிலாந்தும் அரையிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அரையிறுதிக்கு தகுதி பெறப்போகும் 4 - வது அணி எது என்பதில் தான் போட்டா போட்டியாக உள்ளது.
தற்போதுள்ள நிலவரப்படி இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் செமி பைனல் ரேசில் உள்ளன. புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து 8, பாகிஸ்தான், வங்கதேசம் தலா 7, இலங்கை 6 புள்ளி என இடம் பெற்றுள்ளன. இந்த அணிகளில், ஒவ்வொரு அணிக்கும் இன்னும் 2 ஆட்டங்கள் பாக்கியுள்ளன.
இதனால் தாங்கள் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. மற்ற அணிகள் குறிப்பிட்ட போட்டிகளில் வெற்றி அல்லது தோல்வி பெற வேண்டும் என இந்த 4 அணிகளும் கூட்டல், கழித்தல் கணக்கு போட ஆரம்பித்துள்ளது. அதாவது இந்திய அணி, எடுத்து இங்கிலாந்து, இலங்கை, வங்கதேச அணிகளுக்கு எதிரான 3 போட்டிகளிலுமே வென்றால் நல்லது என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. அதே போல வங்கதேசத்திட மோ, ஆப்கனிடமோ பாகிஸ்தான் தோற்க வேண்டும் என இங்கிலாந்து பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது.
இந்நிலையில் தான் அரையிறுதி வாய்ப்பில் பிரகாசமாக இருந்த இலங்கையை, அந்த வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட தெ.ஆப்பிரிக்க அணி தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை, ஆரம்பம் முதலே தெ.ஆப்ரிக்காவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறல் ஆட்டம் ஆட, 49.3 ஓவரில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய தெ.ஆப்ரிக்கா அணி 37. 2 ஓவர்களிலேயே 1 விக்கெட் மட்டும் இழந்து எளிதில் வெற்றி இலக்கை எட்டியது.இந்த வெற்றி தெ.ஆப்பிரிக்காவுக்கு ஆறுதல் என்றாலும், இலங்கைக்கு அதிர்ச்சியாக அமைந்து விட்டது என்றே கூறலாம். இதனால் இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு அம்பேலாகும் நிலை ஏற்பட்டுவிட்டது. அடுத்து நடக்க உள்ள 2 போட்டிகளில் இலங்கை அபார வெற்றி பெற்று, அணிகள் தாங்கள் ஆடும் போட்டிகளில் மோசமான தோல்வியைத் தழுவினால் மட்டுமே இலங்கைக்கு அதிர்ஷ்டவசமாக அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் ; மே.இந்திய தீவுகளை பந்தாடுமா இந்தியா?