சினிமாவில் நடிக்கவில்லை பிஎச்.டி. படிக்கிறேன் : சத்யராஜ் மகள் திவ்யா விளக்கம்
தனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணமில்லை என்றும் நியூட்ரிஷியன் படிப்பில் பிஎச்.டி செய்து கொண்டிருக்கிறேன் என்றும் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊட்டச்சத்து மருத்துவராக பணியாற்றி வருகிறார். ஆனால், திவ்யா சினிமாத்துறையில் நுழையவிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன.
இந்நிலையில், இதற்கு திவ்யா மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’நான் சினிமாவில் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மை இல்லை. நான் சினிமா துறையை மதிக்கிறேன். அதிகமான சினிமா படங்களைப் பார்க்கிறேன்.
ஆனால் சினிமாதுறையில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்ததில்லை. ஊட்டச்சத்து தொடர்பான டாக்குமெண்டரி படத்தில் பங்கேற்றுள்ளேன். ஆனால், சினிமாவுக்கு வரும் எண்ணமில்லை. இப்போது நியூட்ரிஷியன் படிப்பில் பிஎச்.டி செய்து கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.