11ம் நம்பர் பஸ் கூட்டமா இருக்கும் - கூகுள் எச்சரிக்கும்!

பேருந்து மற்றும் தொடர்வண்டிகளில் பயணியர் கூட்டம், இருக்கை வசதி ஆகியவை பற்றிய விவரங்களை தரும் வசதி கூகுள் மேப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 200 நகரங்களில் கூகுளின் இந்த வசதி கிடைத்து வந்தது.

குறிப்ட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டிகளில் முன்பு பயணித்த பயனர்கள் தரும் விவரம், குறித்த மாதங்களின் முக்கியத்துவம் ஆகியவற்றுடன் கூகுள் மேப்பை பயன்படுத்தும் பயனர்களிடம் கேள்வி எழுப்பி கிடைக்கும் பதில்களை கொண்டு போக்குவரத்து நெரிசல் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் நெரிசல் ஆகிய தகவலை கூகுள் மேப் அளிக்கிறது.

ஒவ்வொரு பயணத்தை முடித்த பிறகும்,

அதிக இருக்கைகள் காலியாக இருந்தன

சில இருக்கைகள் காலியாக இருந்தன

நிற்க இடம் இருந்தது

நெருக்கமாக நிற்க வேண்டியது இருந்தது

என்ற நான்கு விவரங்களில் ஒன்றை தெரிவு செய்யுமாறு பயனரை கூகுள் மேப்

கேட்டுக்கொண்டிருந்தது.

இது போன்று போதிய தகவலை கூகுள் திரட்டி வைத்துள்ளது. அதைக் கொண்டு தற்போது கூட்டம் பற்றிய கணிப்புகளை கூறி வருகிறது.

பொது போக்குவரத்து பற்றிய தகவலை நிறுவனங்கள் அளிக்காத இடங்களில் பேருந்து எப்போது வந்து சேரும் என்ற விவரத்தை அளிக்கும். மேலும் சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கிறது என்ற தகவலும் கூகுள் மேம் மூலம் அளிக்கப்படும்.

வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இடம் இருக்கிறதா என்றும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பொது வாகனங்களில் பயணிப்போருக்கு உதவும் வகையில் அந்த வாகனங்கள் வழக்கமான பாதையை விட்டு அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் விலகிச் சென்றால் எச்சரிக்கை கொடுக்கும் வசதியை (Stay Safer) சமீபத்தில் இந்தியாவில் கூகுள் அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டும் இந்த எச்சரிக்கை வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.

More News >>