குழந்தைகள் விரும்பி பருகும் பன்னீர் பாயாசம் ரெசிபி

குழந்தைகள் விரும்பி பருகும் பன்னீர் பாயாசம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பால் - ஒரு லிட்டர்

பாதாம் - கால் கப்

முந்திரி - கால் கப்

உலர் திராட்சை - கால் கப்

நெய் - 2 தேக்கரண்டி

பன்னீர் - 200 கிராம்

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

சர்க்கரை - தேவையான அளவு

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

கன்டெண்ஸ்டு மில்க் - அரை கப்

செய்முறை:

முதலில், பாத்திரத்தில் பால் ஊற்ற நன்றாக கொதிக்கவிடவும். பால் நன்றாக காய்ந்து கொஞ்சம் கெட்டியாகும்.

இடையே, பாதாம், முந்திரி, உலர் திராட்சையை சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து வைக்கவும்.

பால் கெட்டியானதும், அரை கப் கன்டென்ஸ்டு பால் சேர்க்கவும்.

ஒரு பக்கம் குங்குமப்பூவை கால் காப் பாலில் ஊறவிடவும்.

பன்னீரை துருவி பாலுடன் சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

அத்துடன், ஏலக்காய்த்தூள், தேவையான அளவு சர்க்கரை, குங்குமப்பூ சேர்க்கவும்.

இறுதியாக, வறுத்த பாதாம், முந்திரி சேர்த்து இறக்கி பரிமாறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான பன்னீர் பாயாசம் ரெடி..!

More News >>