காரசாரமான மிளகாய் உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபி
தயிர் சாதத்திற்கு ஏற்ற சூப்பரான ஸ்பைசி சைட் டிஷ் மிளகாய் உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 200 கிராம்
மைதா - அரை கப்
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 4
வெங்காயம் - ஒன்று
சைனீஸ் சில்லி பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
ஸ்பிரிங் ஆனியன் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு
செய்முறை:
ஒரு வாணலியை தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.
அத்துடன், மைதா மாவு, உப்பு சேர்த்து கலந்து, பொரித்து எடுக்கவும்.
வாணலியில், எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு, சைனீஸ் சில்லி பேஸ்ட், மிளகு தூள், சோயா சாஸ், தக்காளி சாஸ், எலுமிச்சை சாறு, உப்பு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பிறகு, உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி வறுக்கவும்.
இறுதியாக, வெங்காயத்தாள் பொடியாக நறுக்கி தூவி இறக்கவும்.
சுவையான சில்லி உருளைக்கிழங்கு வறுவல் ரெடி..!