தப்பியோடிய துபாய் இளவரசி ஜெர்மனியிடம் அடைக்கலம்?

துபாய் மன்னரின் 6வது மனைவி தனது 2 குழந்தைகளுடன் 31 மில்லியன் பவுண்டுகளை எடுத்து கொண்டு ஜெர்மனிக்கு தப்பியோடினார். அங்கிருந்து அவர் லண்டனுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

துபாய் மன்னர் ஷேக்முகமது பின் ரஷீத் அல் மக்ட்யூம் உலகின் மிகப் பெரிய பணக்காரர். இவரது 6வது மனைவி ஹயா பின்ட் அல் ஹூசைனுக்கும், மன்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அவரிடம் விவாகரத்து கோரினார். இதற்கிடையே, கடந்த மே 20ம் தேதிக்கு பிறகு ஹயாவை பொது வெளியில் காணவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.

அதன்பின்பு, அவர் துபாயில் உள்ள ஜெர்மன் நாட்டு தூதரின் உதவியுடன் லண்டனுக்கு தப்பியோடி விட்டதாக செய்திகள் வெளியாயின. அவர் நாட்டை விட்டு செல்லும் போது 31 பில்லியன் பவுண்டுகளுடன்(இந்திய ரூபாயில் 217 கோடி), தனது 2 குழந்தைகளையும் அழைத்து சென்று விட்டதாகவும் செய்திகள் வந்தன. இதன் காரணமாக, துபாய் அரசுக்கும், ஜெர்மனி அரசுக்கும் இடையே மோதலும் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இளவரசி ஹயா தற்போது லண்டனில் இருந்து ஜெர்மனுக்கு செல்லவிருப்பதாகவும், அந்நாட்டிடம் அரசியல் அடைக்கலம் கேட்டுள்ளதாகவும், ஹயாவின் நெருக்கமான நண்பர்கள் கூறியுள்ளனர். மேலும், இங்கிலாந்து அரசு தன்னை துபாய் மன்னரிடம் திருப்பி ஒப்படைத்து விடும் என்று ஹயா அஞ்சுவதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

ஜோர்டான் மன்னர் அப்துல்லாவின் ஒன்று விட்ட சகோதரியான ஹயா, துபாயில் சமூக சேவைகள் புரிந்து சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவ்வாக இருந்தார். ஆனால், கடந்த பிப்ரவரி முதலே அவர் மீடியாக்களில் இடம் பெறவே இல்லை. தற்போது அவரைப் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன.

இதற்கிடையே, துபாய் மன்னர் மக்ட்யூம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹயாவுக்கு விடுத்த செய்தியில், ‘‘நீ பொய் சொல்லி வாழ்ந்த காலம் முடிந்து விட்டது. நீ யாருடன் பிசியாக இருக்கிறாயோ, அங்கேயே போய் விடு. நீ வாழ்ந்தாலும், செத்தாலும் எனக்கு கவலையில்லை’’ என்று காரசாரமாக கூறியிருக்கிறார்.

ஏற்கனவே, மக்ட்யூமின் மகள் லத்திபா, நாட்டை விட்டு தப்பியோட முயன்ற போது பிடிபட்டு, துபாய் அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தனது தந்தையின் கொடுமை தாங்காமல் வெளியேற முயன்றதாக கூறியிருந்தார். தற்போது மன்னரின் மனைவி ஓடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபியாக திரிபாதி பொறுப்பேற்றனர்
More News >>