பத்திரிகையாளருக்கு ஆயுள்காப்பீடு எம்.யூ.ஜே. சங்கம் தகவல்!
சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின் (எம்.யூ.ஜே) பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 28ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இது குறித்து, அந்த சங்கத்தின் தலைவர் பீர்முகமது, பொதுச் செயலாளர் எல்.ஆர்.சங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) செயற்குழு கூட்டம், ஜூன் 29ம் தேதியன்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மூத்த பத்திரிகையாளரும் ஏ.என்.ஐ தமிழ்நாடு பிரிவின் தலைவருமாக பணியாற்றிய கோபிநாத், மாலைமுரசு டிவி செய்தியாளர் செந்தில்குமார், நியூஸ்ஜே டிவி செய்தியாளர் பிரசன்னா ஆகியோரின் மறைவுக்கு செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் மூத்த உறுப்பினரும் தினகரன் நாளிதழில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளருமான முகவை சுந்தரராஜன் மறைவுக்கு செயற்குழு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது.
சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின் (எம்.யூ.ஜே) பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 28ம் தேதி ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்பது சங்கத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். இதற்காக தமிழக அரசிடம் தொடர்ந்து சங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், எம்.யூ.ஜே உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு பெற்றுத்தர சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஆர்.பகவான் சிங் மற்றும் நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டனர். இதில் புதிய தலைமுறை ஊடக நிறுவனத்தின் தலைவர் ஆர்.பி.சத்யநாராயணா, எம்.யூ.ஜே உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு செய்துதர ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு செயற்குழு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.இவ்வாறு பீர்முகமது, எல்.ஆர்.சங்கர் தெரிவித்துள்ளனர்.
இனி தாராளமா பேசலாம்..! அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்