அத்திவரதர் தரிசனத்துக்கு எப்போது போகலாம்?

அத்திவரதர் தரிசனம் செய்ய வரும் மக்களுக்கு சில அறிவிப்புகளை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1ம் தேதி கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த பெருவிழாவில் முதல் நாளில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது குடும்பத்தினருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அத்திவரதர், திருக்குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு தரிசனம் அளிப்பதால், பக்தர்கள் கூட்டம் முதல் நாளிலேயே அலைமோதியது.

இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக சில முக்கிய அறிவிப்புகளை கோயில் நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது. அவை வருமாறு:

* உள்ளுர் மக்கள், தங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பு தரிசனம் செய்ய மட்டுமே ஆதார் காட்டு தேவை. இந்த தரிசனம் செய்ய உள்ளுர் மக்கள் தங்கள் வார்டு சேவை மையத்தில் பாஸ் வாங்க வேண்டும் (கட்டணம் ஏதும் இல்லை)

* வெளியூர் மக்கள் 48 நாளும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச அல்லது 50 ரூபாய் சிறப்பு கட்டணம் மூலம் தரிசனம் செய்யலாம். இதற்கு ஆதார் கார்டு தேவை இல்லை ரூ.50 தரிசன டிக்கெட் கோயில் மேற்கு கோபுரம் அருகிலே கிடைக்கும். ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியாது.

* உள்ளூர் மக்களும் இந்த இலவச அல்லது 50ரூ டிக்கெட் மூலம் தரிசனம் செய்யலாம். ஆனால் உள்ளூர் சிறப்பு தரிசன பாஸ் மூலம் ஒரு முறை மட்டுமே ஆதார் காட்டி தரிசனம் செய்ய முடியும்

* ரூ.500 தரிசனத்திற்கு டிக்கெட் பெற www.tnhrce.org என்ற இணையதள முகவரியில் வரும் 2.07.2019 முதல் பதிவு செய்யலாம். ஒரு நாளைக்கு அதில் 500 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

* வெளியூர் மக்கள் பஸ் நிலையத்தில் இருந்து கோயில் வந்து சேர, திரும்பி செல்ல பல மினி பஸ், வேன், ஷேர் ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* கோயில் வரும் பக்தர்கள் கார் பார்க்கிங் செய்ய திருவீதி பள்ளம் - திருச்சோலை தெரு அருகில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கே மட்டுமே கார் நிறுத்த முடியும். கோயில் அருகில் அனுமதி இல்லை உள்ளுர் மக்களுக்கு மாலை 5 முதல் இரவு 8 வரை தரிசன நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயதானவர்கள், ஊனமுற்றோர் தரிசனம் செய்ய சிறப்பு வழி செய்யப்பட்டுள்ளது. பேட்டரிகார்கள், சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி ஆட்சி கவிழும் ஸ்டாலின் மீண்டும் உறுதி
More News >>