சூப்பரான சுவையில் மசாலா பர்கர் ரெசிபி

வீட்டிலேயே சூப்பரான சுவையில் மசாலா பர்கர் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பர்கர் பண் - 2

வெங்காயம் - 1

குடை மிளகாய் - 1

தக்காளி - 2

பன்னீர் - 250 கிராம்

சீஸ் - 1 கப்

வெண்ணெய்

பூண்டு - கால் கப்

இஞ்சி - கால் கப்

சாட் மசாலா

கொத்தமல்லித்தழை

உப்பு

செய்முறை:

வாணலியியை அடுப்பில் வைத்து வெண்ணைய சேர்த்து உருக்கியதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.

பிறகு, பொடியாக நறுக்கிய குடை மிளகாய், தக்காளி, சாட் மசாலா, உப்பு சேர்த்து கலந்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

தொடர்ந்து, பன்னீர் துண்டுகள், சீஸ் துருவல், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.

தற்போது பண் எடுத்து இரண்டாக வெட்டி மசாலாவை அதில் வைத்து மூடவும்.

பிறகு ஒரு பேனில் வெண்ணெய்விட்டு உருகியதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், சாட் மசாலா, கொத்தமல்லித்தழை, சீஸ் சேர்த்து வதக்கி பண்ணை வைத்து பிரட்டவும்.

அவ்ளோதாங்க சுவையான மசாலா பர்கர் ரெடி..!

More News >>