காசிக்கு சென்று திரும்பிய போது விபத்து..! 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டம் கன்னேபூடுரு வலசா கிராமத்தைச் சேர்ந்த 40 பேர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்து கொண்டு காசி யாத்திரைக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்றனர்.
காசியாத்திரையை முடித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு இன்று திரும்பிக் கொண்டிருந்த பொழுது பதினைந்து நிமிடங்களில் சொந்த ஊருக்கு சேர வேண்டிய நிலையில் கஉகுபில்லி மண்டலம் கட்கவலச - தோட்ட பள்ளி வழியாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்து சின்ன மேரங்கி சந்திப்பு அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிகாலை 5 மணி அளவில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்தவர்களை விஜயநகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரம் என்பதால் டிரைவர் தூக்கத்தில் கண் இமையத்த நேரத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
புனேயில் நள்ளிரவில் சோகம்... கனமழையால் சுவர் இடிந்து 15 பேர் உயிரிழப்பு