குப்பம் தொகுதியில் வாக்காளர்களிடம் உருகிய சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவரது சொந்த தொகுதியான குப்பத்தில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். இதற்காக விஜயவாடா கன்னவரன் விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக குப்பம் சென்றார்.

பின்னர் ராமகுப்பத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, குப்பம் தொகுதியில் நான் பிறக்காவிட்டாலும் ஒவ்வொரு குடும்பத்தினர் வீட்டிலும் நான் உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை கருதி தொடர்ந்து ஏழு முறை என்னை வெற்றி பெறச் செய்தீர் என உருகினார்.

என்றும் தாம் இதனை மறக்க மாட்டேன் என்றும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தாம் இங்கு வராவிட்டாலும் தன்னை தொடர்ந்து வெற்றி பெறச் செய்து வரக்கூடிய இந்த மக்களுக்கு எப்பொழுதும் தாம் கடமைப்பட்டுள்ளேன் என கண் கலங்கினார். ஐந்து முறை முதல்வராகவும் நான்கு முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளேன்.

எப்பொழுதும் எனக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. ஆனால் எதற்காக இந்த தேர்தலில் தெலுங்கு தேச கட்சி தோல்வி அடைந்தது என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். தேர்தலுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் தெலுங்கு தேச கட்சியினர் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளனர்.

கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் காப்பாற்றக்கூடிய பொறுப்பு எனக்கு உள்ளது, கட்டாயம் அதனை செய்வேன் என உதுதியளித்தார். தெலுங்கு தேச கட்சியினரை பயமுறுத்தும் நோக்கில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்தில் இது சரியானது அல்ல. அரசியல் என்பது தேர்தல் வரை மட்டுமே ,தேர்தலுக்குப் பிறகு ஆளுங்கட்சி அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் எனக் கூறினார்.

சட்டம் ஒழுங்கு எக்காரணத்தை கொண்டும் சீர்குலைய கூடாது. அனைத்தையும் பொதுமக்கள் கவனித்து வருகின்றனர். எந்தெந்த இடத்தில் தெலுங்கு தேச கட்சியினர் மீது தாக்குதல் நடைபெறுகிறதோ அல்லது பிரச்சினை ஏற்படுகிறதோ அந்த இடத்திற்கு நானே நேரடியாக சென்று தேவைப்பட்டால் இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே இருந்து உரிய தீர்வு காண்பேன். குப்பம் தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தினேன். அந்தத் திட்டத்தின் மூலமாக தண்ணீர் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.

அதற்குண்டான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இறுதிக்கட்டத்தில் நாம் ஆட்சியை இழந்து விட்டேன். அந்தத் தண்ணீர் மட்டும் வந்திருந்தால் அதிக அளவு தொழிற்சாலைகள் இங்கு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். இருப்பினும் அதனை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்வேன் என அவர் தெரிவித்தார். ..ஆந்திரா, சந்திரபாபுநாயுடு, குப்பம், உருக்கமான பேச்சு..

-தமிழ்

 
More News >>