சுழலும் காமிராவுடன் அறிமுகமானது கேலக்ஸி ஏ80
ஜென் இசட் மற்றும் மில்லேனியல்ஸ் எனப்படும் 90களின் பிற்பாதி மற்றும் புத்தாயிரத்தில் (2000ம் ஆண்டு) பிறந்த இளந்தலைமுறையினரை கருத்தில் கொண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ வரிசை ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது. கேலக்ஸி ஏ வரிசையில் இதுவரை ஏ50, ஏ30, ஏ20, ஏ10, ஏ70 மற்றும் ஏ2கோர் ஆகியவை வெளியாகியுள்ளன. சுழலும் காமிரா வசதி கொண்ட ஏ80 தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ80 சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.7 அங்குலம்; எஃப்ஹெச்டி; 1080X2400 தரம்; சூப்பர் AMOLED
சுழலும் காமிரா: சுழலக்கூடிய காமிராக்களை முன்பக்கமும் பின்பக்கமும் கொண்டது.முப்பரிமாண (3D) தொழில்நுட்பத்துடன் கூடிய 48 எம்பி ஆற்றல் கொண்ட முதன்மை காமிரா மற்றும் 8 எம்பி ஆற்றல் கொண்ட அல்ட்ரா வைடு 123 டிகிரி காமிரா
இயக்க வேகம்: 8 ஜிபி RAM
சேமிப்பளவு: 128 ஜிபி சேமிப்பு திறன்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை
பிராசஸர்: ஆக்டோ கோர் (2.2 GHz Dual + 1.8 GHz Hexa)
சாதனத்தின் அளவு: 165.2 X 76.5 X 9.3 மிமீ
மின்கலம்: 3700 mAh (25 W அதிகவேக மின்னேற்ற வசதியுடன்)மலேசியா, மத்திய அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இணையம் மூலம் விற்பனைக்கு வந்துள்ள கேலக்ஸி ஏ80, இம்மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணைய அங்காடிகள் மட்டுமின்றி குறிப்பிட்ட விற்பனை நிலையங்களிலும் இது நேரடியாக விற்பனை செய்யப்படும்.