ராஜ்யசபா தேர்தலில் வைகோ போட்டி - மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தில் காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6 இடங்களில் திமுகவுக்கு 3 இடங்கள் கிடைப்பது உறுதி என்ற நிலையில், திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள ஒரு இடம், மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டின் போது உறுதியளித்தபடி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் இன்று சென்னையில் மதிமுகவின் உயர்மட்டக் குழுவில், ராஜ்ய சபா தேர்தலில் வைகோ போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தலில் வைகோ போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த வைகோ, அவருக்கு பொன்னாடை போர்த்தி தனது நன்றியைத் தெரிவித்ததுடன், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.

More News >>