திருப்பதி அருகே செம்மரம் கடத்தல்..! தமிழகத்தைச சேர்ந்த 18 பேர் உட்பட 24 பேர் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பக்ரா பேட்டை அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தல் நடந்ததாக பாக்கரா பேட்டை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி நேற்று காலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

                                                  

 

அப்போது பாக்ரா பேட்டை அருகே உள்ள சின்னக் கொட்டிகல்லு பகுதியில் இரண்டு வாகனங்கள் வனப்பகுதிக்குள் தனியாக இருப்பதை கவனித்த போலீசார் அங்கு சென்று சோதனை நடத்திய போது, 20க்கு மேற்பட்டோர் செம்மரங்களை வாகனத்தில் ஏற்றுவது தெரியவந்தது. இதனை அடுத்து சுற்றி வளைத்து பிடித்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடத்தப்படவிருந்த 30 லட்சம் மதிப்பிலான 21 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் 18 பேர் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் 4 பேர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பீலேரியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் உள்ளூரை சேர்ந்த நான்கு பேரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

-தமிழ் 

சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ - போலீஸ் கமிஷனரிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்
More News >>