சத்து நிறைந்த பச்சை பயறு இட்லி ரெசிபி
சுவையான மற்றும் சத்து நிறைந்த பச்சை பயிறு இட்லி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - ஒரு கப்
உளுந்தப் பருப்பு - அரை கப்
உப்பு
செய்முறை:
முதலில் பச்சை பயிறை தண்ணீரில் சுமார் எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு இதனை மையாக அரைத்துக் கொள்ளவும்.
இதேபோல், உளுந்தப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த இரண்டு மாவையும் ஒன்றாக கலக்கி சுமார் 3 மணி நேரம் ஊறவிடவும்.பிறகு, உப்பு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்நிலையில், இந்த மாவை வழக்கம்போல் இட்லி குக்கரில் இட்லி ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான பச்சை பயறு இட்லிக்கு காரசார கார சட்னி அசத்தலாக இருக்கும்.
சுவையான பாசிப் பருப்பு சாம்பார் ரெசிபி