கம கமக்கும் அயிரை மீன் குழம்பு செய்முறை

கம கமக்கும்.. அயிரை மீன் குழம்பு  எப்படி செய்றதுன்னு பார்க்கலாமா..  

சமைக்க தேவையானவை

அயிரை மீன் – அரை கிலோபூண்டு – 4 பல்சின்ன வெங்காயம் – 10புளி – 25 கிராம்வெந்தயம் – அரை டீஸ்பூன்மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்தக்காளி – 2மல்லித் தூள் – 4 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 2மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்தேங்காய்ப் பால் – அரை தம்ளர்கறிவேப்பிலை - சிறிதளவுநல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவுஉணவு செய்முறை : அயிரை மீன் குழம்பு

ஸ்டெப் 1:

முதலில் பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெந்தயம் போட்டுத் தாளிக்கவும் .

ஸ்டெப் 2:

பின் அதனுடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு போட்டு நன்றாக வதக்கவும் .

ஸ்டெப் 3:

பின் அதில் தக்காளியை விழுதாக அரைத்துச் சேருங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து, பொன்னிறமாகும்வரை வதக்குங்கள்.

ஸ்டெப் 4:

பின்னர் 25 கிராம் புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும் அயிரை மீன்களைப் போட்டு, ஐந்து நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிடுங்கள்.

ஸ்டெப் 5:

பின்னர் தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கிவையுங்கள்.

More News >>