ராகுல் வெகுசிலரில் ஒருவர் பிரியங்கா மனமுருகி பாராட்டு

நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது. தோல்வி குறித்து விவாதிக்க கடந்த மாதம் 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை.

ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள 4 பக்க கடிதத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகல் என்ற செய்தியை வெளியிட்டார், அதில் கூறியதாவது ‘‘காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சியை மீண்டும் வலுப்படுத்த கடுமையான முடிவு எடுக்க வேண்டும். புதிய தலைவரை தேர்வு செய்யும் விஷயத்தில் கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மேலும், தேர்தல் கமிஷன், பா.ஜ.க. பற்றியும் கருத்துக்களை கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘‘உங்களுக்கு இருப்பது போன்ற துணிச்சல் வெகுசிலருக்குத்தான் இருக்கும். உங்கள் முடிவுக்கு உள்ளார்ந்த மரியாதையை தெரிவிக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ராகுல்காந்தியின் பிடிவாதம் நீடிப்பு... தலைவர் பதவியில் நீடிக்கக் கோரி இளைஞர் காங்கிரசார் தர்ணா
More News >>