அப்ரூவரானார் இந்திராணி சிதம்பரத்துக்கு நெருக்கடி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆவதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதான பிடி இறுகுகிறது.

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தை நடத்தி வந்தார். தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பு பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. மும்பையில் பிரபலமான நிறுவனமாக திகழ்ந்தது. இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, கடந்த 2007ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு வாரியம் அனுமதி அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, கடந்த ஏப்ரல் 15ம் ேததி, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரித்து வருகிறது. மேலும், இந்த வழக்கில் ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு சி.பி.ஐ.க்கு மத்திய சட்ட அமைச்சகம் கடந்த பிப்ரவரி 3ல் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் தான் அப்ரூவர் ஆகி உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி, இந்திராணி முகர்ஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், இந்திராணி முகர்ஜி அப்ரூவராகி பல தகவல்களை வெளியிட வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்து ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. பிடி

இறுகுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர் நியமனம்
More News >>