அட்டகாசமான சுவையில் பட்டர் சிக்கன் ரெசிபி
வீட்டிலேயே சுவையான பட்டர் சிக்கன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - 3 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் - ஒரு
டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
வெண்ணை - 5 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - 2
தக்காளி - 1
முந்திரிபருப்பு - 5
கரம் மசாலா - ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
கிராம்பு - 3
க்ரீம் - ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை - அரை டேபிள்ஸ்பூன்.
உப்பு
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மல்லி தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
அத்துடன் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து ஊறவிடவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு 80% வேகவிட்டு எடுக்கவும்.
அதே வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி முந்திரி, ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், கரம்மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
கூடவே தண்ணீர் சேர்த்து நன்றாக வெந்ததும் ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் சீரகம் கிராம்பு சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வரும்போது வறுத்து வைத்த சிக்கன் துண்டுகள், கிரீம், வெண்ணெய், தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
சுவையான பட்டர் சிக்கன் ரெசிபி ரெடி..!
ஈசியா செய்யலாம் தந்தூரி சிக்கன் ரெசிபி