அனைவருக்கும் பிடித்த மட்டன் கொத்துக்கறி கட்லெட் ரெசிபி

சுவையான மட்டன் கொத்துக்கறி கட்லெட் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

மட்டன் 250 கிராம்

வெங்காயம் - 1

வேக வைத்த உருளைக்கிழங்கு - 4

முட்டை - ஒன்று

மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லி தூள் - ஒரு டீஸ்பூன்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

சீரகம் - கால் டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டு - அரை டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை

கொத்தமல்லித்தழை

பிரட் க்ரம்ஸ் - ஒரு கப்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் எலும்பில்லாத மட்டன் துண்டுகளை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி கொத்துக்கறியாக தயார் செய்யவும்.

இதனை ஒரு பிரஷர் குக்கரில் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு சுமார் 5 விசில் விட்டு வேகவிடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சோம்பு, நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி, அடுத்ததாக வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து கிளறவும்.

பின்னர், வேகவைத்த கொத்துக்கறியை இத்துடன் சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை நன்றாக வேகவிட்டு இறக்கவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.மற்றொரு கிண்ணத்தில் பிரட் க்ரம்ஸ் தயாராக வைக்கவும்.

கொத்துக்கறியை கொஞ்சமாக எடுத்து கட்லட் வடிவில் தட்டி அதனை முட்டையில் முக்கி எடுத்து, பின்னர் க்ரம்ஸில் பிரட்டி சூடான எண்ணெயில் விட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

அட்டகாசமான சுவையில் மட்டன் கொத்துக்கறி கட்லெட் தயார்..!

இதை ட்ரை பண்ணுங்க.. வெஜ் கீமா மசாலா ரெசிபி

More News >>