வாடகைக் குடியிருப்புகளுக்கு விரைவில் புதிய சட்டம் பட்ஜெட்டில் அறிவிப்பு
வாடகைக் குடியிருப்புகள் தொடர்பாக மாதிரிச் சட்டம் இயற்றப்படும். வாடகை ஒப்பந்தங்கள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும் பல்வேறு அதிரடி முடிவுகளை மேற்கொண்டது. இதன்படி, மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல், பிப்ரவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை மாற்றப்பட்டது. திட்டக்குழு கலைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொறுப்பேற்றார். பிரதமர் இந்திராகாந்திக்கு பிறகு நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் 2வது பெண் அமைச்சர் என்ற பெயரும், முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெயரும் நிர்மலா சீத்தாராமனுக்கும் கிடைத்துள்ளது.
நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். தனது முதல் பட்ஜெட்டை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
இந்தியா இப்போது 6வது பெரிய பொருளாதார நாடு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இது 11ஆவது இடத்தில் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் 657 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் வீடு, கழிவறையை உறுதிப்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது.
பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பேட்டரி வாகனங்கள் உற்பத்தியை அரசு ஊக்குவிக்கும். நீர்வழிப் போக்குவரத்து மூலம் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த திட்டம் தயாரிக்கப்படும்.
சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.1 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். சாதாரண மக்களுக்காக பெரும் சீர்த்திருத்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.
வாடகைக்கு குடியிருப்புகள் விடும் விஷயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். வாடகைக் குடியிருப்புகள் தொடர்பாக நவீன மாதிரிச் சட்டம் இயற்றி மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும்.
அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கபடும். ரயில்வே துறையில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் தனியார் பங்களிப்புகளை அதிகரிக்கச் செய்வோம்.
இவ்வாறு நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
பெண் அதிகாரி மண்டை உடைப்பு; எம்.எல்.ஏ. சகோதரர் கைது