கோவையில் 350 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்..! 2 பேர் கைது
கோவை சூலூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் , சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு கார் வந்து நின்று உள்ளது. அதை அப்பகுதியில் ரோந்து சென்ற மதுவிலக்கு பிரிவு போலீசார் கவனித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் மறைந்திருந்து கண்காணித்தவாறு இருந்த நிலையில், சற்று நேரத்தில் அந்த இடத்திற்கு மற்றொரு கார் ஒன்று வந்துள்ளது. அப்போது காரில் வந்த இருவர் வெள்ளை நிற கேன்களில் இருந்த பொருட்களை மற்றொரு காருக்கு மாற்றுவதை பார்த்து சந்தேகம் அடைந்த மதுவிலக்கு போலீசார் விரைந்து சென்று அந்த இரண்டு கார்களில் இருந்தவர்களையும் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் இருவரும் எரிசாராயம் தயாரிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்த்து. ஒருவர் குளித்தலையை சேர்ந்த சுரேஷ், என்பதும் மற்றொருவர் திருச்சியைச் சேர்ந்த எம்பெருமாள் என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 350 லிட்டர் எரிசாராயம் மற்றும் 14 செல்போன்கள் 35 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் சாவவிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சூலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
காளஹஸ்தியில் செம்மரக்கட்டைகள் கடத்தல்..! ரூ.30 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்