தங்கம் விலையும் எகிறும் பெட்ரோல் விலையும் சர்ர்

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி இரண்டரை சதவீீதம் உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்கம் விலை அதிகரிக்கப் போகிறது.

அதே போல், பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிப்பதால், லாரி வாடகைகளும் அபாயம் உள்ளது. இதனால் மற்ற பொருட்களும் விலை உயரலாம்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது முதலாவது பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புகளில், முக்கியமான ஒன்று, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை அளிக்கப்படும் என்பதாகும். மேலும், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்த பிறகு இந்தியாவுக்கு திரும்பி வந்தால் 180 நாட்கள் வரை கட்டாயக் காத்திருப்பு இல்லாமல் உடனடியாக ஆதார் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதே போல், ரூ80 ஆயிரத்து 250 கோடி செலவில் ஒன்றே கால் லட்சம் கி.மீ. தொலைவுக்கு சாலைகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். அதே சமயம், சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்காக பெட்ேரால் மற்றும் டீசல் விற்பனையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் சிறப்பு வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் ஏற்கனவே பெட்ரோலுக்கு 32 சதவீதமும், டீசலுக்கு 24 சதவீதமும் வாட் வரி விதிக்கப்படுகிறது. தற்போது இந்த புதிய வரியும் விதிக்கப்படுவதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும். இதனால், லாரி வாடகைகள் உயரும். அதைத் தொடர்ந்து, காய்கறிகள் உள்பட அனைத்து பொருட்களும் விலை உயர வாய்்ப்புள்ளது.

தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரி 2.5 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். அதாவது தற்போது வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யும் போது 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படுகிறது. இது இனிமேல் 12.5 சதவீதமாக அதிகரிக்கும். எனவே, தங்க நகைகள் விலையும் கடுமையாக உயரும். ஏற்கனவே தமிழகத்தில் தங்கம் ஒரு பவுன் விலை ரூ26 ஆயிரம் கடந்து விட்டது. இது இன்னும் அதிகரித்து கொண்டே செல்லும் என தெரிகிறது. இதனால், நடுத்தரக் குடும்பங்கள்தான் கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடிக்க தண்ணீர் எங்கே..? காலிக்குடங்களுடன் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
More News >>