உலகக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் கதை முடிந்தது

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் பாகிஸ்தான் வெளியேறியது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் எந்த அதிசயமும் நிகழ்த்த முடியாமல் 315 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அரையிறுதி வாய்ப்பு இல்லாமல் போனது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் முன்னேறி விட்டன. 4-வது அணியாக நுழையப் போவது யார்? என்பதில் நியூசிலாந்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு சின்னஞ்சிறிய குழப்பம் நிலவியது.அதாவது, இன்று வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான், முதலில் டாஸ் வெல்ல வேண்டும். பின்னர் 350 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும். அதன் பின் வங்கதேசத்தை 312 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு நுழைய முடியும் என்பது போன்ற கட்டாயம் இருந்தது.

ஆனால் இன்றைய போட்டியில் டாஸ் மட்டுமே பாகிஸ்தானுக்கு சாதகமாக இருந்தது. வங்கதேச வீரர்களின் அபார பந்து வீச்சால் பாகிஸ்தான் வீரர்கள் எந்த அதிரடியும் காட்டி அதிசயம் எதுவும் நிகழ்த்த முடியவில்லை. இதனால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை மட்டுமே பாகிஸ்தானால் சேர்க்க முடிந்தது.பாகிஸ்தான் அணியில் இமாம் (100) சதமடித்தார். பாபர் ஆஸம் (96) சதமடிக்கும் வாய்ப்பை 4 ரன்களில் தவறவிட்டார். வங்கதேசத்தின் முஸ்தபிகுர் 5 விக்கெட்டுகளை சாய்த்து சாதித்தார்.

இந்தப் போட்டியில் குறைந்த பட்சம் 350 ரன்கள் குவித்து, வங்கதேசத்தை 312 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அதிசயம் எதுவும் நிகழவில்லை. இதனால் அரையிறுதி வாய்ப்யை இழந்து, இந்தப் போட்டியில் வென்றாலும், தோற்றாலும் புள்ளிப்பட்டியலில் 5-வது இடம் தான் என்ற திருப்தியுடன் பாகிஸ்தான் வெளியேறுகிறது.

More News >>