இன்னுமா பிரிட்டிஷ் சர்க்கார் நடக்குது? 82 வயது முதியவர் கொந்தளிப்பு
ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட 82 வயது முதியவர், ‘‘நாட்டுல என்னய்யா நடக்குது... இன்னுமா பிரிட்டிஷ் சர்க்கார் நடக்குது...’’ என்று ஆவேசமாக கேட்ட சம்பவம், ரயில்வே துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து கான்பூர் செல்லும் சதாப்தி ரயிலில் எடவாவில் இருந்து காசியாபாத் செல்வதற்காக 82 வயது முதியவர் ராம் ஆவாத் தாஸ் ஏறியிருக்கிறார். அப்போது ரயில்வே போலீசார் அவரை ரயிலில் ஏற விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்களிடம் ராம் ஆவாத் தாஸ், ‘‘நாட்டுல என்னய்யா நடக்குது... இன்னுமா பிரிட்டிஷ் சர்க்கார் நடக்குது... நான் முன்பதிவு செய்த டிக்கெட் வைத்திருக்கிறேன்...’’ என்று ஆவேசமாக கேட்டிருக்கிறார். இதன்பின், அவர் அடுத்த பெட்டிக்கு சென்று ஏறுவதற்குள் ரயில் போய் விட்டது.
இதையடுத்து, ராம் ஆவாத் வடக்குமத்திய ரயில்வே அதிகாரிகளிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், ‘‘தாம் காந்தி போல வேட்டியும், துண்டும் மட்டும் அணிந்திருந்ததால்தான் என்னை ரயில்வே போலீசார் ரயிலில் இருந்து இறக்கி விட்டனர். இன்னும் பிரிட்டிஷ் சர்க்கார் நடப்பது போல் இருக்கிறது. அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இது பற்றி, வடக்கு மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அஜித்சிங்் குமார் கூறுகையில், ‘‘முதியவர் முன்பதிவு டிக்கெட் வைத்திருந்தார் என்பது உண்மை. அவர் தவறுதலாக பவர் கோச்சில் ஏறியிருக்கிறார். அதனால், போலீசார் அவரை வேறொரு கோச்சுக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். அவர்களுடன் முதியவர் வாக்குவாதம் செய்து விட்டு வேறொரு கோச்சுக்கு செல்வதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. எடவாவில் இந்த ரயில் 2 வினாடிகள்தான் நிற்கும். இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை’’ என்றார்.
ராம் ஆவாத் ஒரு சாது. அவர் எடவாவில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியை முடித்து விட்டு, காசியாபாத் செல்லும் போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அடுத்தடுத்து அவதூறு வழக்கு; மும்பை கோர்ட்டில் ராகுல் ஆஜர்